திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு திருமண விருந்தாக கொரோனா.

திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு திருமண விருந்தாக கொரோனா.
திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு திருமண விருந்தாக கொரோனா.

ஊரடங்கு விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடியதால் ஏற்பட்ட விபரீதம்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற திருமணம் ஒன்றில் சுமார் 400 பேர் கலந்துகொண்டுள்ளனர். அதன்பின்னர் தான் மணமகனுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. மென்பொறியாளரான மணமகன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் புது டெல்லியிலிருந்து வீடு திரும்பியுள்ளார். திருமணம் நடைபெறும் போதே அவர் கொரோனா அறிகுறிகளுடன் இருந்தார் என்றும், அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து அழைத்துவந்து திருமணம் செய்து வைத்தனர் எனவும் அதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து அவர் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இறுதி சடங்கில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட 111 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், மணமகனின் உறவினர்கள் மற்றும் மணமகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாகவே வந்துள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடியதால் ஏற்பட்ட இந்த விபரீதம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com