ஜூலை 6 முதல் தேசிய நினைவிடங்கள் திறப்பு...

ஜூலை 6 முதல் தேசிய நினைவிடங்கள் திறப்பு...
ஜூலை 6 முதல் தேசிய நினைவிடங்கள் திறப்பு...

நாடெங்கும் உள்ள தேசிய நினைவிடங்களை வரும் 6 ஆம் தேதி முதல் திறக்க உள்ளதாக மத்திய  அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.தற்போது இந்த கொரோனா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.  அதன்படி மார்ச் 17 ஆம் தேதி முதல் நாடெங்கும் உள்ள 3691 நினைவிடங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விடங்கள் மூடப்பட்டன.

அதன்பிறகு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்த இடங்கள் திறக்கப்படவில்லை.  இப்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.   பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.  மேலும் கடந்த மாதம் நாட்டில் உள்ள நினைவிடங்களில் 820 திறக்கப்பட்டன.

மீதமுள்ளவைகளும் வரும் 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார்.   அத்துடன் மாநில மத்திய உள்ளாட்சி நிர்வாகம் தடை விதிக்காவிடில் மட்டுமே அந்தந்த பகுதி நினைவிடங்கள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com