குஜராத் மாநிலத்தில் காதலை முறித்துக் கொண்ட இளம்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றது.
ஜுனாகத், பாரா பகுதியிலுள்ள பரபரப்பான காய்கறி சந்தை அருகில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பாவனா சோனு கோஸ்வாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாவனாவின் முன்னாள் காதலன் பிரவீன் கோஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலை முறித்துக்கொண்டு இன்னொருவருடன் பாவனா வாழ்ந்து வந்ததே இந்த கொலைக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடித்து கணவருடன் லாத்தி என்ற நகரில் குடியேறிய பாவனாவுடன் பிரவீன் என்பவர் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் ஒன்றரை ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தமது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஊருக்கு சென்ற நிலையில் பிரவீனை பாவனா கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் ஒன்பது மாதம் முன் சோனு கோஸ்வாமி என்பவருடன் பாவனா நெருக்கமானதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்தவுடன் பிரவீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாவனவை மிரட்டி உள்ளார்.
ஆனால் சுவாமியும் பாவனாவும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் குடியிருப்பு இருக்கும் ஜூனாகத் பகுதிக்கு சென்ற சென்று தன்னுடன் வர வேண்டும் என்று பாவனை பிரவீன் கட்டாயப் படுத்தி உள்ளார்.ஆனால் அதற்கு பாவனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பாவனாவை காய்கறி சந்தையில் வைத்து தன் தம்மிடமிருந்த கத்தியால் பலமுறை தாக்கி கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் வரும் வரையில் அந்த சடலத்தின் அருகாமையிலேயே காத்துக் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.