தேசியம்
அடேங்கப்பா..! 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி அசத்திய இந்திய ரயில்வே..
அடேங்கப்பா..! 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி அசத்திய இந்திய ரயில்வே..
தென்கிழக்கு மத்திய ரயில்வே பிரிவால் இயக்கப்பட்ட 'ஷேஷ்நாக்' மிக நீளமுள்ள ரயிலாக மாறியுள்ளது.
இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வே பிரிவால் இயக்கப்பட்ட 'ஷேஷ்நாக்' மிக நீளமுள்ள ரயிலாக மாறியுள்ளது. வியாழக்கிழமை இயக்கப்பட்ட இந்த ரயில் 2.8 கிலோமீட்டர் நீளம் கொண்டிருந்தது. ரயிலில் நான்கு மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட்டு நான்கு வெற்று BOXN ரேக்குகள் கொண்டு செல்லப்பட்டன. இதுவே மிக நீண்ட ரயில் என இந்திய ரயில்வேயும் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கினால் ரயில் சேவைகள் முடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற முயற்சியை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது. முன்னாதாக ஜூலை 1 அன்று வரலாற்றில் முதல் முறையாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் சரியான நேரத்தில் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.