ஹோண்டா டபிள்யூஆர்வி பிஎஸ்6 வெளியீட்டு தேதி அறிவிப்பு…

ஹோண்டா டபிள்யூஆர்வி பிஎஸ்6 வெளியீட்டு தேதி அறிவிப்பு…

ஹோண்டா நிறுவனத்தின் புதிய டபிள்யூஆர்வி பிஎஸ்6 மாடல் இந்திய வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். ஏற்கனவே இந்த கார் விற்பனையகங்களுக்கும் வந்தடைந்து விட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட எஸ்யுவி மாடல் முன்கூட்டியே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார் உற்பத்தி பணிகள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்வி விவரம்: 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு என்ஜின்களும் முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்