ரூ. 1000 வரை உயர்ந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை…

ரூ. 1000 வரை உயர்ந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை…

ரியல்மி இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதே மொபைல் போன்கள் விலை உயர்வுக்கான காரணம் என அறிவிப்பு வெளியானது. அந்த வரிசையில், மீண்டும் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி 5ஐ 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் விலை ரூ. 9,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 10,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 10,999 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ரியல்மி 6 4ஜிபி+64ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14999 ஆகவும், 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ. 15,999 இல் இருந்து ரூ. 16,999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரியல்மி 6 8ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 16,999 இல் இருந்து ரூ. 17,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இது மூன்று வேரியண்ட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.1000 அதிகம் ஆகும். மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்