ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்த உறுப்பினராக சப்போர்ட் செய்ததே ஜவஹர்லால் நேருதான் என்று ராகுலுக்கு அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகளாக உள்ள அமொிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தடுத்து விட்டது. இதனை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி பலகீனமானவர். மற்றும் சீன பிரதமர் ஜின்பிங்கை கண்டு பயப்படுகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்து இருந்தார். ராகுலின் அந்த பேச்சுக்கு அருண் ஜெட்லி டிவிட்டாில் பதிலடி கொடுத்துள்ளார்.
அருண் ஜெட்லி டிவிட்டாில் பதிவு செய்து இருப்பதாவது: காஷ்மீர் மற்றும் சீனா விஷயத்தில் உண்மையில தவறு செய்தவர் ஒரே நபர். 1955 ஆகஸ்ட் 2ம் தேதி நேரு மாநில முதல் அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், சீனா ஐ.நா.வில் சோ்த்து கொள்ளப்படும். ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் சோ்க்கபடாது. இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்கும் என்று அமொிக்கா பாிந்துரை செய்துள்ளது. ஆனால் சீனா போன்ற பொிய நாடு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறவில்லை என்றால் அது நியாயமற்றது. அதனால் அமொிக்காவின் பாிந்துரையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆக சீன விவகாரத்தில் உண்மையான பாவி யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சொல்வாரா? என்று அவர் டிவிட் செய்து இருந்தார்.