சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம்: மருத்துவமனை தகவல்
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு புதன்கிழமை அன்று, கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என வந்தது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்ந நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்திர ஜெயினுக்கு நுரையீரல் தொற்று அதிகமானதால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.