இந்த ஆராய்ச்சியில், சீனாவின் குவாங்சோவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான 349 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,964 பேர் பற்றிய தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். விஞ்ஞானிகள் முதன்முதலாக ஆராய்ச்சி செய்து அதுபற்றிய தங்கள் முடிவை ‘தி லேன்செட் தொற்று நோய்கள்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில், ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருக்கிறது என்பதை அவர் உணர்வதற்கு முன்பாகவே, அவர் தன்னோடு ஒன்றாக வாழ்கிறவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரப்பி விடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.