இந்தியாவுக்கு எதிராக சீனா அட்டகாசம்; கல்வான் ஆற்றை மாற்றும் சீன புல்டோசர்கள்

இந்தியாவுக்கு எதிராக சீனா அட்டகாசம்; கல்வான் ஆற்றை மாற்றும் சீன புல்டோசர்கள்-

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. இந்தியா தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. இந்தியா தரப்பில்  20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. 
சீன வீரர்கள் ஜூன் 15 மாலை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு வந்தனர், இந்திய வீரர்களும் - சீன வீரரகளும்மோதிக்கொண்டனர். சில இந்திய வீரர்கள் அப்பகுதியில் உள்ள குன்றிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டனர்.சிலர் கடுமையான குளிர்ந்த காலநிலைக்கு ஆளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சில வீரர்கள் கல்வான்  ஆற்றில்  விழுந்து உயிர் இழந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும், நதி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கும் போது அது வெறுமனே வறண்டு ஓடிக்கொண்டு இருப்பதை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.
தற்போது இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையில் பயங்கர மோதல் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்கு லடாக்கில் கல்வான் ஆற்றின் ஓட்டத்தைத் தடுக்க அல்லது மாற்றி அமைக்க செய்வதற்கான சீன முயற்சிகளை செயற்கை கோள் படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. புல்டோசர்கள் காணப்படும் இடத்திலேயே ஆற்றின் ஓட்டம் மாறுகிறது - நீல நீரைப் பாய்ச்சுவதிலிருந்து ஒரு சிறிய, சேற்று நீரோடை வரை, அது சிறிது தூரத்தில் எல்லைகட்டுப்பாட்டு கோட்டியில் இந்தியப் பக்கத்தைக் கடக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.
 எல்லை கட்டுப்பாட்டு கோட்டின்  கிலோ மீட்டருக்குள் கால்வான் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ லாரிகள் பெரும்பாலும் வறண்ட கல்வான் நதி படுக்கையில் நிறுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com