ஜல்லிக்கட்டு மேல் பீட்டாவுக்கு எப்போதும் ஒரு கண்ணு.. மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய பீட்டா

ஜல்லிக்கட்டு மேல் பீட்டாவுக்கு எப்போதும் ஒரு கண்ணு.. மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய பீட்டா

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் அனுமதியளிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு 103 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் அனுமதியளிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு 103 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில்  தென் மாவட்ட மக்களின்  உனர்வுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை, நடத்த பெரும் போராட்டங்களுக்கு பின் அனுமதி பெறப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்ற பீட்டா அமைப்பின் குற்றச்சாட்டுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. 
இந்நிலையில் தமிழகத்தில்  அரியலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும்போது காளைகள் கடுமையாக  துண்புறுத்தப்படுவதாக கூறி 103 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றையும், வீடியோ காட்சிகளையும் பீட்டா  அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; "ஜல்லிக்கட்டு என்பது நமது நவீன மற்றும் முற்போக்கான சமுதாயத்தில் ஆபத்தான  ஒன்று என்றும், ஆபத்தான நடைமுறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், காளைகள் வெறும் கைகளால் தாக்கப்பட்டு, கயிறுகளால் அடித்து, ஆணி நனைத்த மரக் குச்சிகள், உலோகக் கம்பிகள் மற்றும் வாடிவாசல்களுக்குள்  அரிவாள்கள் ஆகியவற்றால் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து வாடிவாசல்களில் பீதியடைந்த காளைகள் வீதிகளில் ஓடும் போது பார்வையாளர்களை காயப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்களால் பல காளைகள் பரிசோதிக்கப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com