ஊக்கை விழுங்கி மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஊக்கை விழுங்கி மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மும்பையில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை ஒன்று தற்செயலாக ஊக்கு (Safety pin) ஒன்றை விழுங்கியதால் மூச்சுத்திணறால் அவதிப்பட்ட குழந்தையை மருத்துவமனை அழைத்து செல்வதற்காக பெற்றோர் வீட்டிற்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வாகனத்திற்காக காத்திருந்த போது அந்த வழியாக கொலேகர் என்ற காவலர் வந்துள்ளார்.
அவர் உடனடியாக தனது சொந்த வாகனத்தில் குழந்தை மற்றும் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி செய்துள்ளார். அவர் தக்க நேரத்தில் செய்த உதவியால் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை மும்பை காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.