வேகமாக பரவும் கொரோனா.... இந்தியாவில் 4 லட்சத்தை நெருக்கும் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.80 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்னர்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 3,80,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,04,711 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,20,504 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 52,334 பேருக்கும், டெல்லியில் 49,979 பேருக்கும், குஜராத்தில் 25,601 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.