மும்பையில் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் குறைந்தபட்சம் 25 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய முனையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வெளியே சாலையை கடந்து செல்வதற்காக நடை மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை அந்த நடைமேம்பாலம் யாரும் எதிர்பாராத வேளையில் இடிந்து விழுந்தது. இதனால் அப்போது அந்த பாலத்தில் நடந்து கொண்டு இருந்தவர்கள் கீழே விழுந்தனர். இந்த எதிர்பாராத விபத்தில் குறைந்தபட்சம் 2 பேர் உயிர் இழந்ததாக தகவல். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், இந்த விபத்தில 2 பேர் பலியாகினர். காயம் அடைந்தவர்களுக்கு ஜி.டி. ஹாஸ்பிட்டலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறினர்.