கொரோனா நோயாளியின் உடலை பாதி எரிந்த நிலையில் அநாதையாக விட்டு சென்ற ஊழியர்கள்

கொரோனா நோயாளியின் உடலை பாதி எரிந்த நிலையில் அநாதையாக விட்டு சென்ற ஊழியர்கள்
கொரோனா நோயாளியின் உடலை பாதி எரிந்த நிலையில்  அநாதையாக விட்டு சென்ற ஊழியர்கள்

உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்த நிலையில் அநாதையாக கிடந்துள்

:
 உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்த நிலையில் அநாதையாக கிடந்துள்ளது.
58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும் போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் அங்கு உடலை தகனம் செய்ய சென்றவர்கள் உடலை அப்படியே விட்டு விட்டு வந்துவிட்டனர்
இதுகுறித்து இறந்த நபரின் குடும்பத்தினர் தகனம் செய்யும் ஆட்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். உடல் புதன் கிழமை வரை பாதி தகனம் செய்யப்பட்ட நிலையிலேயே உடல் அங்கு கிடந்துள்ளது.
மேலும் உடல் முழுவதும் தகனம் செய்யாதவரை குடும்பத்தினர் எவரும் சாப்பிடவில்லை. சுமார் 59 மணிநேரம் கழித்து புதன் கிழமை பாதி உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 59 மணி நேரம் இறந்தவரின் குடும்பத்தினர் பட்டினி கிடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com