17 நாட்களுக்கு முன்னர் தான் அப்பா ஆனார்... கதறி அழும் ராணுவ வீரரின் மனைவி

17 நாட்களுக்கு முன்னர் தான் அப்பா ஆனார்... கதறி அழும் ராணுவ வீரரின் மனைவி
17  நாட்களுக்கு முன்னர் தான் அப்பா ஆனார்...  கதறி அழும் ராணுவ வீரரின் மனைவி

இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த சம்பவமானது அரங்கேறியுள்ள

இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பிறந்து 17  நாட்களே ஆன குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது.
லடாக் எல்லையில் வீரமரணடைந்த குந்தன் குமார் ஓஜா. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ரான்ஞ்சியில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திஹாரி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். 2011-ம் ஆண்டில் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவருக்கு 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய
இந்நிலையில் 17 நாட்களுக்கு முன்னர் நமிதா தேவி அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அன்றுதான் ஓஜா இறுதியாக தன்னுடைய குடும்பத்தினருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது நிச்சயமாக எல்லையில் பதற்றம் ஓய்ந்த பிறகு விடுமுறை கேட்டு மக்களை பார்க்க வருவதாக மனைவியிடம் உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த உறுதியானது வாழ்நாள் முழுவதிலும் நிறைவேறாத வகையில் லடாக் பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் குந்தன் குமார் ஓஜா உயிரிழந்ததாக மஇந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.
இந்த செய்தியை கேட்டவுடன் அவருடைய குடும்பத்தினர் மீளாத்துயரில் மூழ்கியுள்ளனர். இந்த செய்தியானது நாட்டு மக்கள் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com