லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்ப்பட்ட மோதலில் இந்திய தரபில் 20 வீரர்கள் வரையும், சீன தரப்பில் 42 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது வீடியோ கன்ப்ரன்சிங் மூலம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று பதிலளித்தார். மேலும் 1996,2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.