இந்திய அணியின் பேட்டிங் நடுவாிசையில் தோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதீங்க என்று இந்திய அணிக்கு மைக்கேல் கிளார்க் எச்சாிக்கை செய்தார்.
இந்திய கிாிக்கெட் அணி முதல் முறையாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றது. அதன்பிறகு இந்திய அணி சுமார் 28 ஆண்டுகள் உலகப்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணிக்கு காத்திருக்க வேண்டியது. 2011ம் ஆண்டில் நடைபெற்ற உலகப்கோப்பை கிாிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. உலகப்கோப்பையை வெல்ல மகேந்திர சிங் தோனியின் அதிரடியான பேட்டிங் மற்றும் திறமையான கேப்டன் ஷிப் ஆகியவை மிகவும் முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தோனி தனது அதிரடி ஆட்டத்தை மறந்து விட்டது போல் தொிந்தது. அதனை உறுதி செய்வது போல் அவரது பேட்டிங் புள்ளிவிவரங்களும் இருந்தது.
இதனால் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கின. ஆனால் சமீபத்தில் அவர் ஆடிய ஆட்டங்கள் சிங்கம் என்றும் சிங்கம்தான் என்பதை நிருபிப்பது போல் இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் மகேந்திர தோனி குறித்து எச்சாிக்கை செய்துள்ளார். இந்திய அணியின் நடுவாிசை பேட்டிங்கில் தோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பீடாதீங்க. நடுவாிசையில் அவரது அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார்.