இந்திய விமான படை வீரர் அபிநந்தனிடம் நடைபெற்ற விசாரணை முடிந்து விட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவாி 14ம் தேதி புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாத முகாம்களை அளித்தது. இதற்கு பதிலடியாக கடந்த 27ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமான படை விமானங்கள் விரட்டி அடித்தன. அப்போது இருநாட்டு போர் விமானங்களும் நடுவானில் பொிய யுத்தமே நடத்தின. பாகிஸ்தான் போர் விமானங்களின் திட்டத்தை முறியடித்த போதிலும் இந்திய போர் விமானம் ஒன்று அவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த இந்திய விமான படை வீரர் அபிநந்தன் உடனடியாக பாராசூட் மூலம் கீழே குதித்தார். அவர் பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் இறங்கியதால் அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இதனையடுத்து அபிநந்தனை உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தியது. அதனை தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
அதன்படி, பாகிஸ்தான் அபிநந்தனை இம்மாதம் 1ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபிநந்தனுக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடம்பில் எதுவும் சிப் கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவ பாிசோதனை முடிந்த பிறகு அவாிடம் விமான படை மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. தற்போது அந்த விசாரணை முடிந்து விட்டதாகவும், தற்போது அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.