சர்வதேச அளவில் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்......151 இடத்தில் சென்னை......

சர்வதேச அளவில் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்......151 இடத்தில் சென்னை......
சர்வதேச அளவில் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்......151 இடத்தில் சென்னை......

சர்வதேச அளவில் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 10வது ஆண்டாக ஆஸ்திாியாவின் தலைநகரான வியன்னா முதல் இடத்தை பிடித்துள்ளது.

வீட்டு வசதி, குற்றங்கள், காற்று மாசு, சுகாதார அமைப்பு, கல்வி அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அளவீடுகளில் ஒரு நகரத்தின் வாழ்வதற்கான தகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் மெர்சர் நிறுவனம் ஆண்டு தோறும் வாழ தகுந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான வாழ தகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 10வது ஆண்டாக ஆஸ்திாிலியாவின் தலைநகரான வியன்னா முதல் இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூாிச் நகரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் கனடாவின் வான்கூவர், ஜெர்மனியின் முனிச், நியுசிலாந்தின் ஆக்லாந்து ஆகிய நகரங்கள் 3வது இடத்தில் உள்ளன. ஜெர்மனியின் ட்யூஸெல்டார்ப் மற்றும் பிராங்பர்ட் ஆகிய நகரங்கள் முறையே 6 மற்றும் 7வது இடங்களில் உள்ளது. டென்மார்க்கின் கோபென்ஹகென் (8), சுவிட்சர்லாந்தின் ஜெனிவா (9) மற்றும் பேசல் (10) ஆகிய நகரங்களும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

அதேசமயம் இந்திய நகரங்கள் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளன. ஹைதராபாத் (143), புனே (143), பெங்களூரு (149), சென்னை (151), மும்பை (154), கொல்கத்தா (160) மற்றும் டெல்லி (162) ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.  ஈராக்கின் பாக்தாத் நகரம் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (231) உள்ளது.

உலகில் மிகவும் பாதுகாப்பான நகராக லக்சம்பர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com