பாஜகவில் இணைந்த சோனியாவின் உதவியாளர்!

பாஜகவில் இணைந்த சோனியாவின் உதவியாளர்!
பாஜகவில் இணைந்த சோனியாவின் உதவியாளர்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் முக்கிய உதவியாளராக இருந்தவர் டாம் வடக்கன். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசில் இருக்கும்பொழுது, அதிகார மையத்தில் இருப்பவர் யாரென்று தெளிவாக தெரியாத சூழ்நிலையில் தான் அதிகம் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வளர்ச்சிக்குரிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் டாம் வடக்கன் உறுதிப்பட கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com