3 மாத சிறை தண்டனையை தவிா்க்க எாிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை கொடுப்பதற்காக அனில் அம்பானி பணத்துக்காக போராடி கொண்டு இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருந்தவர் அனில் அம்பானி. பிசினஸ் எல்லாம் அடிவாங்கியதால் தற்போது வெறும் கோடீஸ்வராக உள்ளார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எாிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் பாக்கி வைத்தது. பலமுறை கேட்டும் தராததால் நீதிமன்றம் சென்ற எாிக்சன் நிறுவனம்.
வழக்கை விசாாித்த நீதிமன்றம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எாிக்சன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை குறைத்தது. ஆனாலும் அந்த தொகையையும் அனில் அம்பானி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தது. இதனையடுத்து இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றம் சென்றது.
மார்ச் 19ம் தேதிக்குள் எாிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்கவில்லை என்றால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது இருக்கும் என்று எச்சாிக்கை செய்தது. இதனையடுத்து அனில் அம்பானி பணத்தை புரட்ட பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். வருமான வாித்துறை திரும்ப அளித்த ரீபண்ட் ரூ.260 கோடியை தங்களது வங்கி கணக்குகளிலிருந்து நேரடியாக எாிக்சன் நிறுவனத்துக்கு கொடுக்க ஸ்டேட் வங்கி உள்பட 37 வங்கிகளுக்கு உத்தரவிடும் படி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் அனில் அம்பானி நிறுவனம் மனு தாக்கல் செய்தது. ஆனால் பொதுமக்களின் பணத்தை பாக்கி தொகையை கொடுக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு உாிமை கிடையாது. மேலும் அந்த நிறுவனம் அனில் அம்பானி சிறைக்கு செல்வதை அனுமதிக்கும் என்பதை நம்ப முடியாது என்று ஸ்டேட் வங்கி தீர்ப்பாயத்திடம் பதில் அளித்தது. தீர்ப்பாயம் தனது உத்தரவை ஒத்தி வைத்துள்ளது.
இன்னும் 5 நாட்களில் அனில் அம்பானி பணத்தை கட்டுவாரா அல்லது சிறைக்கு செல்வாரா என்பது தொிந்து விடும்.