மக்களே உஷார்! பால் கவரின் ஓரத்தில் வெட்டும் சிறு பிளாஸ்டிக் துண்டால் இவ்வளவு பாதிப்பா?

மக்களே உஷார்! பால் கவரின் ஓரத்தில் வெட்டும் சிறு பிளாஸ்டிக் துண்டால் இவ்வளவு பாதிப்பா?
மக்களே உஷார்! பால் கவரின் ஓரத்தில் வெட்டும் சிறு பிளாஸ்டிக் துண்டால் இவ்வளவு பாதிப்பா?

பால் கவரில் ஓரமாக ஒரு சிறு துண்டை முழுவதுமாக வெட்டி விடுபவர்களின் கவனத்திற்கு தான் இந்த பதிவு...

பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு சாரா நிறுவனங்கள் பலவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் பல விஷயங்கள் எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன. 

நான் அனைவரும் தினமும் பால் அருந்தும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான் இது. பால் கவரில் ஓரமாக ஒரு சிறு துண்டை முழுவதுமாக வெட்டி விட்டு உங்களுக்கு பிடித்த டீ, காபியை ரெடி செய்பவர்களின் கவனத்திற்கு தான் இந்த பதிவு...

இந்த சிறு பிளாஸ்டிக் துண்டு ஏராளமான உயிரினங்களின் இறப்பிற்கு காரணமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? குப்பைத்தொட்டியில் கிடக்கும் கோடிக்கணக்கான இந்த சிறு துண்டுகளை மக்காத குப்பையாக பிரித்தெடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மண்ணில் கலந்து விடும் இந்த பிளாஸ்டிக் துண்டுகளை ஒருபோதும் மறுசுழற்சி செல்ல இயலாது. 

மண் மற்றும் நீரில் கலக்கும் இந்த சிறு துண்டுகள் ஏற்படுத்தும் விளைவோ மிக அதிகம். ஏராளமான உயிரினங்களின் இறப்பிற்கு இது காரணமாகிறது. இந்த பிளாஸ்டிக் துண்டுகள் மக்குவதற்கு 1000 ஆண்டுகளோ இல்லை அதற்கு மேலே கூட ஆகலாம். பால் கவரில் இருந்து இதுபோன்ற சிறு துண்டுகளை வெட்டாமல் இருந்தால், குப்பைத்தொட்டியில் 50,00,000 அளவிலான பிளாஸ்டிக் துண்டுகள் சேராமல் தவிர்க்கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால் இனி பால் கவரை பிரிக்கும் போது, ஓரப் பகுதியை முழுவதும் வெட்டி விடாமல் அந்த கவரிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த சிறிய மாற்றம் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com