பஞ்சாப் எல்லையில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கு செல்ல இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையை திறந்து பாதையமைக்க இரு நாடுகளும் பேச்
பஞ்சாப் எல்லையில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கு செல்ல இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையை திறந்து பாதையமைக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருக்கின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள குருதுவாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் சென்று வருவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானில் இருந்து குழு ஒன்று இன்று இந்தியா வருகிறது. வாகா-அட்டாரி எல்லையில் இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச உள்ளனர். எல்லை தாண்டுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி அவரால் கட்டப்பட்டதாக கருதப்படும் கர்த்தார்புர்க்கு விசா இல்லாமல் செல்வதற்கான முயற்சி நடை பெற்று வருகிறது. இதற்காக பேருந்து நிலையம், சாலை வசதி, முக்கிய தேவைகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகின்றனர். தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை செய்ய 54 ஆயிரம் குடியேற்ற மையங்கள் அமைக்கப்பட உள்ளன.