தேசியம்
இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல்
இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல்
இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்கா சென்றுள்ள, இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, இந்தியா- அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆண்ட்ரே தாம்சன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், இந்தியாவில் 6 அமெரிக்க அணு மின் நிலையங்கள் அமைப்பது உட்பட பாதுகாப்பு மற்றும் சிவில் அணு ஒத்துழைப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.