வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க 20 லட்சம் பாட்டில்கள் தயாரிப்பு

வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க 20 லட்சம் பாட்டில்கள் தயாரிப்பு
வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க 20 லட்சம் பாட்டில்கள் தயாரிப்பு

வாக்காளர்களின் விரல்களில் வைக்க 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களின் விரல்களில் வைக்க 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. 

நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம், தேர்தல் ஆணையத்திடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com