தொடர் விமான விபத்து காரணமாக, இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொடர் விமான விபத்து காரணமாக, இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவுக்கு சொந்தமான போயிங்-737 மேக்ஸ் 8 என்ற விமானம் ஞாயிற்றுக்கிழமை தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.
இதன் எதிரொலியாக, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, பிரிட்டன், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகர கோர்ட்டில் 35 வழக்குகளும், சியாட் நகர கோர்ட்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.