தகனம் செய்யப்பட்ட கொரோனா நோயாளி

தகனம் செய்யப்பட்ட கொரோனா நோயாளி; உயிருடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
விராட்நகரில் வசிக்கும் 71 வயதான தேவ்ரம்பாய் மகாங்குராவ் பிசிகர் என்ற மூதாட்டி, மே 29ஆம் தேதி அன்று அசர்வாவில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜி.சி.ஆர்.ஐ.) இறந்ததாக அறிவிக்கப்பட்டார். 
அவர் தகனம் செய்த சில மணி நேரங்களிலேயே, அவர் நன்றாக இருக்கிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்தது. சிவில் மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தும் மற்றொரு அழைப்பு அன்றைய மறுதினம் அவர்களுக்கு வந்தது. இதனால் குடும்பத்தினருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மூதாட்டி உயிருடன் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்