கொரோனாவுக்கு 1.90 லட்சம் பேர் பாதிப்பு

கொரோனாவுக்கு இந்தியாவில் 1.90 லட்சம் பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 5394ஆக உயர்வு
இந்தியாவில் மொத்தம் 1,90,535 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 91,819 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4,835 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 93,322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் கொரோனா வைரஸ் தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67,655ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22,333 பேருக்கும், டெல்லியில் 19,844 பேருக்கும், குஜராத்தில் 16,779 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்