2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவுக்கு பலி

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவுக்கு பலி
டெல்லியில் 24 மணி நேரத்தில் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவில் கைரேகை நிபுணராக பணியாற்றிய 54 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு இருமல், காய்ச்சல் இருந்தது. ரத்த மாதிரியை பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் மாலையில் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல், டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 52 வயது உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 11 மற்றும் 22ஆம் தேதிகளில் அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக கடந்த மாத தொடக்கத்தில் 31 வயதான போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்