மும்பையை நோக்கி நகர்ந்து வரும் நிசார்கா புயல்:

மும்பையை நோக்கி நகர்ந்து வரும் நிசார்கா புயல்:


1891ம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்ட்ராவை நெருங்கி வரும் முதல் ஜூன்மாத வெப்ப மண்டல நிசார்கா புயல்  என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலுக்கு நிசார்கா எனப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக மும்பை கரையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. நாளை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3ம் தேதி பிற்பகலுக்குள் புயல் வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மகராஷ்ட்ரா அரசு எச்சரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்