கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: மருத்துவ நிபுணர்கள் குழு அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாற வில்லை என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் குழு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்திய பொது சுகாதார சங்கம், சமூக மருத்துவ சங்கம், இந்திய தொற்று நோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதில், கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் சென்றடையவில்லை. அதே நேரத்தில், பொது முடக்கத்துக்கு முன்பாக வெளிமாநில மக்கள் அவரவர் இடங்களுக்கு செல்ல அனுமதித்திருந்தால் நோய் பரவுதல் ஏற்பட்டிருக்காது.
எனவே கொரோனா தொற்று பரவுதலை முறையாக கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து நோய் பாதிப்பை கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று நோய் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை சரியாக அடையாளம் கண்டு அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்