இந்தியாவில் இதுவரை 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் கொரோனா தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 59,54 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 62,228ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2,098ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33,133 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.