வெட்டுக்கிளிகள் அட்டூழியம்... ஜூன் 15க்கு மேல் 17 மாநிலங்களில் தீவிரம் காட்டும்

வெட்டுக்கிளிகள் அட்டூழியம்... ஜூன் 15க்கு மேல் 17 மாநிலங்களில் தீவிரம் காட்டும்

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் படையெடுத்துள்ள கோடிக்கணக்கான வெட்டுக் கிளிகள் மேலும் 12 மாநிலங்களுக்குள் புகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நாவின் உணவு மற

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் படையெடுத்துள்ள கோடிக்கணக்கான வெட்டுக் கிளிகள் மேலும் 12 மாநிலங்களுக்குள் புகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது
கிழக்கு பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் உட்பட இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் அபாயம் என்று, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது. ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்கின்றன.இந்த வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களில் கர்நாடகா வரை பரவும் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கணித்துள்ளது.  மொத்தமாக இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாலைவன வெட்டுக்கிளிகள் எனப்படும் இவை ஜூன் 15ம் தேதி வாக்கில் கர்நாடகா, தெலங்கானா, உத்தரகாண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தலைநகர் டெல்லியை சூழ்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com