கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவுக்கு 9வது இடம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டிய நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 7,964 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 1,73,763ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகின் மிக மோசமான நாடுகளில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இதுவரை 4,971 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் எண்ணிக்கையில் சீனாவை (4,634) இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
உலகம் முழுவதும் 60.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 26.61 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளின் பட்டியல்: