2020குள் இந்தியாவில் 67 கோடி பேருக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது… நிம்ஹான்ஸ் ஷாக்கிங் ரிப்போர்ட்

2020குள் இந்தியாவில் 67 கோடி பேருக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது… நிம்ஹான்ஸ் ஷாக்கிங் ரிப்போர்ட்
2020குள் இந்தியாவில் 67 கோடி பேருக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது… நிம்ஹான்ஸ் ஷாக்கிங் ரிப்போர்ட்

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 67 கோடி இந்தியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிம்ஹான்ஸ் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்றும் சுமார் 67 கோடி இந்தியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின் (நிம்ஹான்ஸ்) நரம்பு தொற்றியல் துறை தெரிவித்துள்ளது

இதுகுறித்து நிம்ஹான்ஸ் கூறுகையில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை. மே 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைந்ததும், ஜூன் 1ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும், டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் மகக்ள் தொகையில் 50 சதம்வீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும். இவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதே தெரியாது. 5 சதவீதம் பேருக்கு தான் செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவக் கட்டமைப்புடன் மாநில அரசுகள் தயாராக வேண்டும். தீவிர மருத்துவச் சிகிச்சைக்கு மாநில அரசுகல் முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியது 

இதற்கிடையில் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ், கொரோனா வைரஸின் உச்சம் செப்டம்பர் மாதத்திற்கு முன் வராது என்றும் இது அடுத்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 5% வரை வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியா உண்மையில் போதுமான சுகாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன்படி பார்த்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் சுமார் 1.30 லட்சம் மருத்துவமனை படுக்கைகள் மட்டுமே உள்ளன. வரும் நாட்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகள் இருக்காது. உண்மையில், பல மாநிலங்கள் ஏற்கனவே இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன, கிராமப்புற இந்தியாவில் விஷயங்கள் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 2019 நிலவரப்படி, கிராமப்புற இந்தியாவில் 16,613 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் 6,733 சுகாதார நிலையங்கள் மட்டுமே 24x7 வேலை செய்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், 12,760 சுகாதார மையங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் மட்டுமே உள்ளன. 

இதுபோன்ற 5,335 மையங்கள் மட்டுமே நாட்டில் இருப்பதால் கிராமப்புற இந்தியா சமூக சுகாதார மையங்களின் நெருக்கடியை எதிர்கொள்கிறது. மே 16 நிலவரப்படி, இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளில் 21% கிராமப்புற மாவட்டங்களாகும். இதை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 3.5 கோடி மக்கள் கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், இவர்களில் 70 லட்சம் பேர் கிராமப்புற இந்தியாவில் இருந்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com