இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மொத்தம் 1,73,763 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 265 பேர் மரணம் அடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 82,370 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11,264 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் கொரோனா தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62,228ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 20,246 பேருக்கும், குஜராத்தில் 15,934 பேருக்கும், டெல்லியில் 17,386 பேருக்கும் கொரோனா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.