உத்தரபிரதேசத்தை தாக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்

உத்தரபிரதேசத்தை தாக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்
இந்தியாவின் வடமேற்கு மாநிலத்தில் உள்ள விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழிவு  ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படக் கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனால் வெட்டுக்கிளிகளை ஒழிக்க, அனைத்து மாநிலங்களிலும் வேளாண் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின், பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம், விவசாய நிலத்தில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்க தொடங்கியுள்ளது. இரண்டு கிராமங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்க வேளாண்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும்போது மருந்து தெளித்து அவற்றை அழித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்