50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை

அமேசான் நிறுவனத்தில்
நாடு முழுக்க கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் விற்பனை தளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் கொடுப்பது அதிகரித்து வருவதை அடுத்து, அமேசான் இந்தியா நிறுவனம் 50 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
தற்காலிக பணியாளர்கள் அமேசான் மையங்கள் மற்றும் டெலிவரி குழுவில் பணியாற்றவுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமேசான் நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்தும் முடிவை அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்