இந்தியாவில் அடுத்த மாதம் "கொரோனா உச்சத்தை தொடும்" ஆய்வில் தகவல்

இந்தியாவில் அடுத்த மாதம்
இந்தியாவில் அடுத்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்ததுலால் பைராகி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியுள்ளது. 
அந்த ஆய்வில், அடுத்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் கொரோனா பரவல் இந்தியாவில் உச்சத்தை தொடும். தினமும் 7,000 முதல் 7,500 பேர் வரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் குறையும். அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியும் அறிகுறி இல்லாதவர்களால் 2 முதல் 3 பேருக்கு பரவும் அபாயம் இருப்பதால்தான் இந்தளவுக்கு பாதிப்பு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசியும், மருந்தும் இல்லாத நிலையில் ஊரடங்கை தொடர வேண்டும். நபருக்கு நபர் பரவுவதைத் தடுக்க பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்