மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63 பேர் மரணம்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் இருந்தாலும், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கொரோனா வைரஸ் தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 44,582ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 1,517ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில் 14,753 பேருக்கும், குஜராத்தில் 13,268 பேருக்கும், டெல்லியில் 12,319 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்