படவாய்ப்பு இல்லாததால் பழம் விற்கும் பாலிவுட் நடிகர்…

கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சூழலால் பொருளாதார நஷடங்கள் ஏற்பட்டு வருவதால் பல நிறுவனங்கள் சம்பள் குறைப்பு, ஆட் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த கொரோனாவால் திரைதுரை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இந்தியா முழுவதும் உள்ள லட்ச கணக்கான துணை நடிகர்கள், தொழிலாளர்கள் உண்ண உணவு இல்லாமல் பட்டினியாக தவித்து வருகின்றனர்.

அவர்களின் ஒருவரான பாலிவுட் நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கு வறுமையில் நடு ரோட்டில் பழம் விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஆயுஷ்மான் குர்ரானவின் ட்ரீம் கேர்ள் உள்பட சில ஹிந்தி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கு காரணமாக வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வந்தார். இதனை தொடர்ந்து பசியின் தாக்கம் குடும்பத்தை அச்சுறுத்த வேறு வழியில்லாமல் குடும்பத்தை காப்பாற்ற தெருக்களில் பழம் விற்கும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ’பழம் விற்பனை செய்வதன் மூலம் எனது அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகிறேன். பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்ப செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காகப் பழம் விற்பதாகவும் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்