இந்தியாவில் அமேசான் உணவு டெலிவெரி சேவை தொடங்கியது…

இந்தியாவில் ஸ்விகி, சொமேட்டோ என ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வர்தகத்தின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் அமேசான், இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பரவலை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை மட்டும் நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது.

இதனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது ஆன்லைன் உணவு டெலிவெரி சேவையை தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக  பெங்களூருவில் தனது சேவையை தொடங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் செய்தி தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் கருத்துக்களில் அடிப்படையில் ஆன்லைன் உணவு டெலிவெரி சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளதாகவும் ஊரடங்கால் வெளியே வரமுடியாமல் உள்ள மக்களுக்கு நல்ல சிறந்த உணவகங்களில் உள்ள தரமான உணவுகளை தற்போது வழங்கி டெலிவெரி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த அமேசான் புட்சேவை பெங்களூருவில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தற்போது வழங்கிவருவதாகவும் விரைவில் சேவை விரிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்