ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவுகளைத் தொடங்கியது…

இந்தியாவில் மே 25ம் தேதி தொடங்கவுள்ள உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியது. 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இரயில், விமானம், பேருந்து சேவைகள் முற்றிலும் நிறத்தப்பட்டுள்ளன. 

தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டதுடன் வெளிநாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் உள்நாட்டு விமான சேவை எப்போது தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் வரும் வரும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. 

விமான சேவையை மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மே 25 முதல் ஆகஸ்ட் 25 வரை அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய விமான நிறுவனங்கள் ஒவ்வொரு வாரமும் மொத்தம் 8,428 விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்