டயபரை காரணமாக வைத்து மனைவிக்கு முத்தலாக் கொடுத்த நபர் மீது வழக்கு…

டயபரை காரணமாக வைத்து மனைவிக்கு முத்தலாக் கொடுத்த நபர் மீது வழக்கு…

மகனுக்கு டயபர் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரில், “எனது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார். அவர் வீட்டிற்கு வந்து என் மாமியார் முன் என்னைத் தோராயமாக துஷ்பிரயோகம் செய்வார். ” என்று தெரிவித்திருந்தார்.

 மேலும் கடந்த திங்கட்கிழமை அருகிலுள்ள கடையில் இருந்து தங்கள் மகனுக்கு டயப்பர்களை வாங்குமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தம்பதியினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மூன்று முறை தலாக் என்று கூறி அவரது மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது, 

இதனை தொடர்ந்து நாக்பாடா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்ததை, தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் 4 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 'தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக, நாங்கள் அந்த நபரை கைது செய்யவில்லை என்றும் இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் விசாரணையை நடத்தி வருகிறோம், தேவைப்பட்டால், அந்த நபர் கைது செய்யப்படுவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்