"ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா" தொற்று

இந்தியாவில் மொத்தம் 1,18,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் மரணம் அடைந்துள்ளனர் என அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,534 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,234 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,454 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 13,967 பேருக்கும், குஜராத்தில் 12,905 பேருக்கும், டெல்லியில் 11,659 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்