புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுகிறார்

தெற்கு வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்தபோது, மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. 
மேலும், காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "புயல் பாதித்த மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை வான்வழியே பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். இதற்காக "மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார்" என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்