தேசியம்
கொரோனா மருத்துவ பணிகளில் பல் மருத்துவர்களும் ஈடுபட அனுமதி…
கொரோனா மருத்துவ பணிகளில் பல் மருத்துவர்களும் ஈடுபட அனுமதி…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,000 த்தை தாண்டியது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,000 த்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 4,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34,109ஆக உயர்வு. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872ஆக உயர்வு.
இந்நிலையில் கொரோனா மருத்துவ பணிகளில் பல் மருத்துவர்களும் ஈடுபட பல் மருத்துவ சங்கம் அனுமதி அளித்துள்ளது. தனி நபர் பாதுகாப்பு கவசத்துடன் போதிய பயிற்சி பெற்ற பின்னர் கொரோனா தொடர்பான மருத்துவ பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.