கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதனால் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதனால் பல்லாயிர கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை வெளியிட அறிவிப்பின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 4,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34,109ஆக உயர்வு. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872ஆக உயர்வு.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.