அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய ஒன்றிணைந்த உபெர் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள்…

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது. முன்னதாக உபெர் நிறுவனம் பிக் பாஸ்கெட் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. 

இந்த சேவைக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என்றும் உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்பு பிக் பாஸ்கெட் டெலிவரிக்களை போன்றே புதிய கூட்டணியிலும் உபெர் நிறுவனமும் அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் என தெரிவித்துள்ளது. சேவையில் பங்கேற்கும் அனைத்து ஓட்டுனர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுவர்  என உபெர் தெரிவித்துள்ளது. 

இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் அமலாகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்